For Important Notifications... Click here

TNPSC குரூப் 4 2022 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

Hall Ticket Released for TNPSC Group 4 Exam

வரும் 24ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று TNPSC இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஊழியர்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு தேர்வு செய்து வருகிறது. திறமையான ஊழியர்களை கண்டறிய பல்வேறு போட்டித்தேர்வுகள் மற்றும் நேர்காணல் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகின்றனர். அரசு பணிகளின் அடிப்படையில் இந்த தேர்வுகள் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4  உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்படுகிறது. 

இந்நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்(வி.ஏ.ஓ.), தட்டச்சர், இளநிலை உதவியாளர், நில அளவையாளர் உள்ளிட்ட 7,382 அரசு பணியிடங்களுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். குரூப் 4 தேர்வு ஜூலை 24ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இன்று டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டு உள்ளது. 

ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி?

  1.  www.tnpsc.gov.in எனும் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
  2. ஆன்லைன் சேவை”என்பதை கிளிக் செய்ய வேண்டும்
  3. ஹால் டிக்கெட் பதிவிறக்கம்” என்பதை கிளிக் செய்யவும்
  4.  பின்னர் வலதுப்பக்த்தில் கொடுக்கப்பட்டுள்ள ''Download Hall Ticket” என்பதைக் கிளிக் செய்யவும். 
  5. 'TNPSC குரூப் 4 தேர்வு' இணைப்பை கிளிக் செய்யவும் 
  6. உங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

Do you want to get all the notes for TNPSC Exams Free of Cost? Well, you are at right place.

Post a Comment