For Important Notifications... Click here

TNPSC 10ம் வகுப்பு தமிழ் | இயல் 6 - நிகழ்கலை | ஒரு வரி வினா-விடை

TNPSC 10ம் வகுப்பு தமிழ் | நிகழ்கலை | ஒரு வரி வினா-விடை

1. கரகாட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Ans
கரகம், கும்பாட்டம்

2. கரக செம்பில் எதனை நிரப்புகின்றனர்?

Ans
மணல், பச்சரிசி

3. கரகாட்டத்தில் எந்தெந்த இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டு இசைக்கப்படுகின்றன?

Ans
நையாண்டி மேள இசை, நாதசுரம், தவில், பம்பை

4. "நீரற வறியாக் கரகத்து"- என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

Ans
புறநானூறு

5. சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய 11 வகைஆடல்களில் என்ற ஆடலும் குறிப்பிடப்படுகிறது?

Ans
குடக்கூத்து

6. கரகாட்டத்திற்கு அடிப்படையாக கருதப்படுவது எது?

Ans
குடக்கூத்து

7. தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டத்தில் கரகாட்டம் நடைபெறுகிறது?

Ans
மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கோயம்பத்தூர், திருநெல்வேலி

8. மயில் வடிவமுள்ள கூட்டுக்குள் ஒருவர் தன் உருவத்தை மறைத்துக் கொண்டு நையாண்டி மேளத்திற்கு ஏற்ப ஆடும் ஆட்டம் எது?

Ans
மயிலாட்டம்

9. காலில் கட்டப்பட்டுள்ள சலங்கை ஒலிக்க மயிலின் அசைவுகளை ஆடிக்காட்டும் ஆட்டம் எது?

Ans
மயிலாட்டம்

10. கரகாட்டத்தின் துணை ஆட்டம் எது?

Ans
மயிலாட்டம்

11. கா என்பதற்கு ____ என்ற பொருள் உண்டு.

Ans
பாரந்தாங்கும் கோல்

12. காவடி அமைப்புக்கு ஏற்ப எவ்வாறு எல்லாம் அழைக்கப்படுகிறது?

Ans
மச்சக்காவடி, சர்ப்பக்காவடி, பூக்காவடி, தேர்க்காவடி, பறவைக்காவடி

13. ஒரே நிற துணியை முன்டாசுபோல கட்டியும, காலில் சலங்கைஉண்டாகட்டும் காலில் சலங்கை அணிந்தும் கையில் வைத்துள்ள சிறு துணியை இசைக்கேற்ப வீசி ஆடும் குழு ஆட்டம் எது?

Ans
ஒயிலாட்டம்

14. ஒயிலாட்டத்தில் எந்தெந்த இசைக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன?

Ans
தோலால் கட்டப்பட்ட குடம், தவில், சிங்கி, டோலக், தப்பு

15. வானத்து தேவர்கள் ஆடிய ஆட்டம் எனப் பொருள் கொள்ளப்படுவது எது?

Ans
தேவராட்டம்

16. ஆண்கள் மட்டுமே ஆடும் ஆட்டம் எது?

Ans
தேவராட்டம்

17. உறுமி என பொதுவாக அழைக்கப்படும் எது தேவர் ஆட்டத்திற்கு இசைக்கருவியாகும்?

Ans
தேவதுந்துபி

18. எந்த ஆட்டம் வேட்டி கட்டியும், தலையிலும், இடையிலும், சிறுதுணி கட்டியும், கால்களில் சலங்கை அணிந்தும் எளிய ஒப்பனையுடன் நிகழ்த்தப்படுகிறது?

Ans
தேவராட்டம்

19. தேவாரட்டதில் பெரும்பான்மையாக எத்தனை கலைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பது மரபாக உள்ளது?

Ans
8-13

20. சேவை ஆட்டத்தில் எந்தெந்த இசைக்கருவிகள் இசைத்துக் கொண்டு ஆடுகின்றனர்?

Ans
சேவைபலகை, சேமக்கலம், ஜால்ரா

21. இசை சார்பு கலையாகவும் வழிபாட்டு கலையாகவும் நிகழ்த்தப்படுவது எது?

Ans
சேவையாட்டம்

22. போலச் செய்தல் - என்ற பண்பினை பின்பற்றி நிகழ்த்தி காட்டும் கலைகளில் ஒன்று?

Ans
பொய்க்கால் குதிரையாட்டம்

23. அரசன் அரசி வேடமிட்டு ஆடப்படும் ஆட்டம் எது?

Ans
பொய்க்கால் குதிரையாட்டம்

24. பொய்க்கால் குதிரை ஆட்டம் என்னென்ன பெயர்களில் அழைக்கப்படுகிறது?

Ans
புரவி ஆட்டம், புரவி நாட்டியம்

25. பொய்க்கால் குதிரை ஆட்டம் யாருடைய காலத்தில் தஞ்சைக்கு வந்ததாக கூறப்படுகிறது?

Ans
மராட்டியர்

26. பொய்க்கால் குதிரை ஆட்டம் ராஜஸ்தானில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Ans
கச்சிக்கொடி

27. பொய்க்கால் குதிரையாட்டம் கேரளாவில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Ans
குதிரைக்களி

28. தப்பு என்ற இசைகருவியை இசைத்துக் கொண்டே அதன் இசைக்கேற்ப ஆடுகின்ற நிகழ்வுகளையே ......... ஆட்டம் எனப்படும்?

Ans
தப்பாட்டம்

29. தப்பு ஆட்டத்தின் வேறு பெயர் என்ன?

Ans
தப்பாட்டம், தப்பட்டை, தப்பு

30. வட்ட வடிவமாக அமைந்துள்ள அகன்ற தோற்கருவியின் பெயர் என்ன?

Ans
தப்பு

31. தப்பாட்டம் எந்தெந்த நிகழ்ச்சிகளில் ஆடப்படுகிறது?

Ans
கோவில் திருவிழா, திருமணம், இறப்பு, விழிப்புணர்வு முகாம்

32. தக தகதகக தந்தத்த தந்தகக என்று தாளம் பதலை திமிலைதுடி தம்பட்ட மும்பெருக - என்ற பாடல் வரியை பாடியவர் யார்?

Ans
அருணகிரிநாதர்

33. தொல்காப்பியம் குறிப்பிடும் கருப்பொருள்களில் ஒன்றாக எது பெற்றுள்ளது?

Ans
பறை

34. தமிழ் மக்களின் வீரத்தை சொல்லும் கலையாக திகழ்வது எந்த ஆட்டம்?

Ans
புலியாட்டம்

35. பாட்டும், வசனமும் இல்லாத ஆட்டம் எது?

Ans
புலியாட்டம்

36. திறந்தவெளியை ஆடுகளமாக்கி ஆடை அணி ஒப்பனைகளுடன் வெளிப்படுத்தப்படுவது எந்த ஆட்டம்?

Ans
தெருக்கூத்து

37. ஒரு கதையை இசை, வசனம், ஆடல், பாடல், மெய்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைத்து வழங்குவது எது?

Ans
தெருக்கூத்து

38. திரௌபதி அம்மன் வழிபாட்டில் ஒரு முக்கிய பகுதியாக இருப்பது எது?

Ans
தெருக்கூத்து

39. தெருக்கூத்தை தமிழ் கலையின் முக்கிய அடையாளமாக ஆக்கியவர்; "நாடகக் கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்" என்றவர் யார்?

Ans
கூத்துப்பட்டறை நா.முத்துச்சாமி

40. தமிழ்நாட்டின் வழிவழி நாடகமுறையான கூத்துக்கலையின் ஒப்பனை முறை, கதை சொல்லும் முறைகளையும் எடுத்துக்கொண்டு புதுவிதமான நாடகங்களை உருவாக்கியவர் யார்?

Ans
கூத்துப்பட்டறை நா.முத்துச்சாமி

41. நாடகத்தில் பயன்படுத்தும் நேரடி இசை முறையை அறிமுகம் செய்து இசையிலும் மாற்றங்களை நிகழ்த்தியவர் யார்?

Ans
கூத்துப்பட்டறை நா.முத்துச்சாமி

42. இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல்வேறு நகரங்களிலும் யாருடைய நாடகங்கள் நடத்தப்பட்டது ?

Ans
கூத்துப்பட்டறை நா.முத்துச்சாமி

43. கூத்துப்பட்டறை நா.முத்துச்சாமி பெற்ற விருதுகள் என்ன?

Ans
இந்திய அரசின் தாமரை திரு (பத்மஸ்ரீ) விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது

44. அர்ஜுனன் தபசு எதை நிகழத்தப்படுவதாக இருக்கிறது?

Ans
மழை

45. தோலால் ஆன பாவையை கொண்டு நிகழ்த்தப்படும் கலை ஆதலால் ..... எனும் பெயர் பெற்றது?

Ans
தோற்பாவை கூத்து

46. பாவையின் அசைவு, உரையாடல், இசை ஆகியவற்றோடு ஒளியும் முதன்மை பெறுவது எந்த கலை?

Ans
தோற்பாவை கூத்து

47. எந்த நூலில் மரப்பாவை பற்றி குறிப்பிடபட்டுள்ளது?

Ans
திருக்குறள்

48. திருவாசகதிலும், பட்டினத்தார் பாடல்களிலும் எதனைப் பற்றிய செய்திகள் காணமுடிகிறது?

Ans
தோற்பாவை கூத்து

49. தோற்பாவைக் கூத்து என்னவாக மாற்றம் பெற்றுள்ளது?

Ans
கையுறை பாவைக்கூத்து, பொம்மலாட்டம்

50. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தெருவிற்கு எந்த மன்னன்பெயர் சூட்டப்பட்டுள்ளது ?

Ans
இராசராச சோழன்

Do you want to get all the notes for TNPSC Exams Free of Cost? Well, you are at right place.

Post a Comment