For Important Notifications... Click here

TNPSC பொதுத்தமிழ் - தொடரால் குறிக்கப்படும் சான்றோர் Part-1

TNPSC பொதுத்தமிழ் - தொடரால் குறிக்கப்படும் சான்றோர்

புதுநெறிகண்ட புலவர் என்று ராமலிங்க அடிகளாரை அழைத்தவர்

Ans
பாரதியார்

அழுது அடியடைந்த அன்பர்

Ans
மாணிக்கவாசகர்

கோவை அருளிய வாயால் பாவை அருளுக என இறைவன் கேட்டதற்கு இணங்க திருவெம்பாவையை இயற்றியவர்

Ans
மாணிக்கவாசகர்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் பொதுநெறி காட்டியவர்

Ans
திருவள்ளுவர் 

வள்ளுவனை பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே எனச் சொன்னவர்

Ans
பாரதிதாசன்

இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே எனப்பாடியவர்

Ans
பாரதிதாசன்

வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள் முதல் உயிர்மொழி

Ans
தேவநேயப் பாவணார்

பதினாறு செவ்வியல் தன்மைகளை கொண்டது செம்மொழி அதுவே நம்மொழி

Ans
தேவநேயப் பாவணார்

திருந்திய பண்பும் சீர்த்த நாகரீகமும் பொருந்திய தூய்மொழி செம்மொழியாம்

Ans
பரிதிமாற்கலைஞர் 

என்றுமுள தென்தமிழ்

Ans
கம்பர் 

தமிழ் இலக்கணம் படிக்க படிக்க விருப்பத்தை உண்டாக்குவது

Ans
கெல்லட் 

யாதும் ஊரே யாவரும் கேளிர்

Ans
புறநானூறு 

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்

Ans
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்

இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிபின்பற்றத்தக்க வழிமுறைகள் தொல்காப்பியத்தில் உள்ளது

Ans
முனைவர் எமினோ

வான்கலந்த மாணிக்கவாசக நின் வாசகத்தை நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்து என் ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே எனப்பாடியவர்.

Ans
வள்ளலார் 

ஒருநாட்டில் பிறந்த மக்களுக்கு வேணடப்படும் பற்றுகளுள் தலையாய பற்று மொழிப்பற்றே

Ans
பெரியார்

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோவைப்போல் யாங்கனுமே பிறந்ததில்லை உண்மை வெறும் புகழ்ச்சியில்லை

Ans
பாரதியார் 

நெஞ்சையள்ளும் அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு

Ans
பாரதியார்

அடிகள் நீரே அருளுக

Ans
சீத்தலைச் சாத்தனார்

தொண்டு செய்து பழுத்த பழம் தூய தாடி மார்பில் விழும் எனப் பெரியாரைப் பாடியவர்

Ans
பாரதிதாசன்

உலகினில் நாகரீகம் முற்றும் அழிந்துவிட்டாலும் திருக்குறளும் கம்பன் காவியமும் இருந்தால் போதும் மீண்டும் அதனைப்புதுப்பித்துவிடலாம்

Ans
கால்டுவெல் 

பக்திச்சுவை நனி சொட்டச்சொட்டப் பாடிய கவி வலவ என சேக்கிழாரைப் புகழ்ந்தவர்

Ans
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்

உலகம் உயிர் கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியந்தான் பெரியபுராணம் எனச் சொன்னவர்

Ans
திரு. வி. க

அன்பைப் பெருக்கி எனது ஆருயிரைக் காக்க வந்த இன்பப் பெருக்கே இறையே பராபரமே எனப்பாடியவர்

Ans
தாயுமானவர்

பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள

Ans
சிலப்பதிகாரம்

திங்களோடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்

Ans
பாரதிதாசன்

தமிழ்கெழு கூடல்

Ans
புறநானூறு

தமிழ்வேலி

Ans
பரிபாடல்

கூடலில் ஆய்ந்த ஒண்தீந்தமிழின்

Ans
மணிவாசகம்

புண்ணொடு தமிழொப்பாவாய்

Ans
தேவாரம்

நீரின் வந்த நிமிர்ப்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் குடகுமலைப் பிறந்த ஆரமும் அகிலும் மயங்கிய நனந்தலை மறுகு

Ans
பட்டினப்பாலை

களிறு எறிந்து பெயர்தல் காளைக்கு கடனே

Ans
புறப்பாடல்

திருக்குறள் ஒரு வகுப்பார்க்கோ ஒரு மதத்தார்க்கோ ஒரு நிறத்தார்க்கோ ஒரு மொழியார்க்கோ ஒரு நாட்டார்க்கோ உரியதன்று. அது மன்பதைக்கு - உலகுக்குப் பொது எனச் சொன்னவர்

Ans
திரு. வி . க 

திருவள்ளுவர் தோன்றியிராவட்டால் தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது. திருக்குறள் என்னும் ஒரு நூல் தோன்றியிராவிட்டால் தமிழ்மொழி என்னும் ஒரு மொழி இருப்பதாக உலகத்தார்க்கு தெரிந்திருக்காது எனச் சொன்னவர்

Ans
கி. ஆ. பெ. விசுவநாதம்

அறிவு அற்றம் காக்கும் கருவி

Ans
திருக்குறள்

பயவாக் களரனையர் கல்லாதவர்

Ans
திருவள்ளுவர்

அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்

Ans
ஔவையார்

ஓர் அணுவை சதகூறிட்ட கோணிணும் உளன்

Ans
கம்பர்

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்

Ans
திருமூலர்

உடம்பிடை தோன்றிற் றொற்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி அடல் உறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வர்

Ans
கம்பர் 

சோவியத்து அறிஞர் தால்சுதாய் வழிகாட்டுதலால் திருக்குறள் மூலத்தை நேரடியாகப்படிக்க விரும்பியே தமிழ் பயிலத்தொடங்கினேன்

Ans
காந்தியடிகள்

அகத்தே கறுத்துப் புறத்து வெளுத்து இருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்த

Ans
வள்ளலார்

உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்

Ans
வள்ளலார்

வெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்

Ans
தாராபாரதி

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

Ans
பாரதியார்

வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார்

Ans
சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை

ஆறுமுக நாவலருக்கு நாவலர் பட்டம் வழங்கியவர்

Ans
திருவாடுதுறை ஆதினம்

ஆறுமுக நாவலரை வசனநடை கை வந்த வள்ளலார் எனப் பாராட்டியவர்

Ans
பரிதிமாற் கலைஞர் 

அசலாம்பிகை அம்மையாரை இக்கால அவ்வையார் எனப்பாராட்டியவர்

Ans
திரு. வி. க

அஞ்சலையம்மாளை தென்னாட்டின ஜான்சிராணி என அழைத்தவர

Ans
காந்தியடிகள்

நாடகச்சாலையொத்த நற்கலா சாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து

Ans
கவிமணி

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்

Ans
இளங்கோவடிகள்

தமிழை வடமொழி வல்லாண்மையினின்று மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான் எனச் சொன்னவர் 

Ans
தேவநேயப்பாவணார்

தொண்டுக்கு முந்து தலைமைக்குப் பிந்து

Ans
மு. வ

எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப் பரணியே எனச் சொன்னவர்

Ans
அறிஞர் அண்ணா

தண்டமிழ் ஆசான் சாத்தான் நன்னூற் புலவன் எனச் சீத்தலை சாத்தனாரைப் பாராட்டியவர்

Ans
இளங்கோவடிகள்

காலை மாலை உலாவி நிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டு கும்பிட்டு காலன் ஓடிப் போவானே

Ans
கவிமணி

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரை தேசியம் காத்த செம்மல் எனப் பாராட்டியவர்

Ans
திரு. வி. க 

வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும்

Ans
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்

தமிழ்மொழி அழகான சித்திர வேலைப்பாடமைந்த வெள்ளித்தட்டு திருக்குறள் அதில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆப்பிள் தமிழ் என்னை ஈர்த்தது குறளோ என்னை இழுத்தது எனச்சொன்னவர்

Ans
டாக்டர் கிரௌல்

தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமின்றி தழைத்தோங்கவும் செய்யும்

Ans
கால்டுவெல்

யார் காப்பார் என்று தமிழன்னை ஏங்கியபோது நான் காப்பேன் என்று சொன்னவர்

Ans
தமிழ் தாத்தா உ. வே. சா

நோய்க்கு மருந்து இலக்கியம் என்று சொன்னவர்

Ans
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் 

அறம் பெருகும் தமிழ் படித்தால் எனச் சொன்னவர்

Ans
பாவலரேறு பெருஞ்சித்திரனார் 

நாளை என் தாய்மொழி சாகுமானால் இன்றே நான் இறந்து விடுவேன் எனச் சொன்னவர்

Ans
ரசூல் கம்சத்தேவ்

ஓவியக்கலைஞர்களை நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழில் நிறுத்துவோர் எனச் சொன்னவர்

Ans
நச்சினார்க்கினியர்

தம் கல்லறையில் இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிகொண்டிருக்கிறான் 

Ans
ஜி. யு. போப் 

கம்பனின் மிடுக்கையும் பாரதியின் சினப்போக்கையும் ஒருங்கே அமைத்துப் பாடியவர்

Ans
க. சச்சிதானந்தன்

பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றது வானினும் நனி சிறந்தனவே

Ans
பாரதியார் 

வெறுத்த வேள்வி விளங்குபுகழ் கபிலன் என பாராட்டியவர்

Ans
பொருந்தில் இளங்கீரனார்

புலனழுக்கற்ற அந்தனாளன் பொய்யா நாவிற் கபிலன் என பாராட்டியவர்

Ans
மாறோக்கத்து நப்பசலையார்

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே - வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி

Ans
ஐயனாரிதனார்

உண்பது நாழி உடுப்பவை இரண்டே (புறநானூறு)

Ans
நக்கீரர்

செல்வத்துப் பயனே ஈதல் (புறநானூறு)

Ans
நக்கீரர்

யாதும் ஊரே யாவரும் கேளிர் (புறநானூறு)

Ans
கணியன் பூங்குன்றனார்

தீதும் நன்றும் பிறர்தர வாரா (புறநானூறு)

Ans
கணியன் பூங்குன்றனார்

பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தலும் அதனினும் இலமே

Ans
கணியன் பூங்குன்றனார்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே (புறநானூறு)

Ans
குடபுலவியனார்

நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின் (புறநானூறு)

Ans
நரிவெரூஉத்தலையார்

தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மையானே (புறநானூறு)

Ans
கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி

மயக்குறு மக்களை இல்லோர்க்கும் பயக்குறை இல்லை (புறநானூறு)

Ans
பாண்டியன் அறிவுடை நம்பி

Do you want to get all the notes for TNPSC Exams Free of Cost? Well, you are at right place.

Post a Comment