For Important Notifications... Click here

TNPSC பொதுத் தமிழ் - இலக்கணம் - Part 2

TNPSC பொதுத் தமிழ் - இலக்கணம் - Part  2

குற்றியலுகரம் : குறுகிய ஓசையுடைய உகரம் குற்றியலுகரம். கு,சு, டு, து,பு, று - எனும் ஆறு வல்லின உகர எழுத்துக்கள் (தனி நெடிலை) சார்ந்து வரும் பொழுதும் பல எழுத்துக்களை சார்ந்து அளவிலிருந்து குறைந்து அரை மாத்திரை அளவில் ஒலிக்கும். இவ்வாறு குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் எனப்படும். (உ.ம் ) நாடு = 1/2 பாலாறு = 1/2 பண்பாடு = 1/2

குற்றியலுகரம் ஆறு வகைப்படும். அவை: நெடில் தொடர்க் குற்றியலுகரம், ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம், உயிர்த்தொடர்க் குற்றியலுகரம், வன் தொடர்க் குற்றியலுகரம், மென் தொடர்க் குற்றியலுகரம், இடைத் தொடர்க் குற்றியலுகரம்.  

நெடில் தொடர் குற்றியலுகரம் : உயிர் நெடில், உயிர் மெய் நெட்டெழுத்துக்களை அடுத்து வரும் வல்லின உகர எழுத்துக்கள் நெடில் தொடர் குற்றியலுகரம் எனப்படும். இவை ஈரெழுத்து சொல்லாகவே வரும். (உ.ம் ) நாடு, ஆடு, ஆறு, காசு 

உயிர் தொடர் குற்றியலுகரம் : அழகு, பாலாறு, பண்பாடு, அரசு மென்தொடர் குற்றியலுகரம் : குற்றியலுகரச் சொல்லின் ஈறெழுத்துக்கு முன்பாக மெல்லின மெய்யெழுத்துக்களான ங், ஞ், ண், ந், ம், ன் வந்தால் அது மென்தொடர் குற்றியலுகரம். ( உ.ம் ) பந்து, மஞ்சு, சங்கு

இடைத்தொடர் குற்றியலுகரம் : குற்றியலுகர சொல்லின் ஈறெழுத்துக்கு முன்பாக இடையின மெய்யெழுத்துக்களாகிய (ய, ர,ல, வ, ழ, ள) வந்தால் அது இடைத்தொடர் குற்றியலுகரம். ( உ.ம் ) சார்பு, மூழ்கு, கொய்து

வன்தொடர் குற்றியலுகரம் : குற்றியலுகர சொல்லின் ஈற்றெழுத்துக்கு முன்பாக வல்லின மெய் எழுத்துக்களான க், ச், ட், த், ப், ற் வந்தால் அது வன்தொடர் குற்றியலுகரம் எனப்படும். (உ.ம் ) பட்டு, பத்து, எட்டு, பாராட்டு. 

ஆய்த தொடர் குற்றியலுகரம் : வல்லின உகர எழுத்தானது ஆய்த எழுத்தை தொடர்ந்து வந்தால் அது ஆய்த தொடர் குற்றியலுகரம் எனப்படும். ( உ.ம் ) காசு, விறகு, பங்கு, எட்டு, அஃது. 

குற்றியலிகரம் : நிலைமொழி குற்றியலுகரமாக இருந்து வரும் மொழி யகரம் வருகையில் நிலைமொழி உகரம் இகரமாக திரிந்து தனக்குரிய ஒருமாத்திரை அளவிலிருந்து அரை மாத்திரை அளவில் குறைந்து ஒலிப்பது குற்றியலுகரம். ( உ.ம்) வண்டு+ யாது வீடு = யாது 

முற்றியலுகரம் : தனிக்குறிலை அடுத்து சொல்லின் இறுதியில் வரும் வல்லின உகரமும். பொதுவாக சொல்லின் இறுதியில் வரும் மெல்லின உகரமும், இடையின உகரமும் முற்றியலுகரம் எனப்படும். ( உ.ம்) நடு,பசு, மது, பொது , உண்ணு, கதவு.

ஐகாரக் குறுக்கம் : ஐ எழுத்து தனித்து ஒலிக்கும் போது இரண்டு மாத்திரை ஒலியில் கொண்டது. இது மற்ற எழுத்துக்களுடன் கூடி வரும்பொழுது தனது 2 மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கும். இதற்கு ஐகாரக் குறுக்கம் என்று பெயர். ( உ.ம் ) ஐ - 2 மாத்திரை, ஐப்பசி - 1 1/2 மாத்திரை, வளையல் - 1 மாத்திரை, தலை - 1 மாத்திரை. 

ஒளகாரக் குறுக்கம் : ஒள எழுத்து தனித்து வரும் பொழுது இரண்டு மாத்திரை அளவு ஒலிக்கும். பிற எழுத்துக்களுடன் வரும்பொழுது தன் மாத்திரை அளவில் இருந்து குறைந்து ஒலிக்கும் அதற்கு ஒளகார குறுக்கம் என்று பெயர். ( உ.ம் ) ஔவை, ஔவியம், ஔசிதம், மௌவல், வௌவால். மேற்கண்ட எடுத்துக்காட்டில் மொழிக்கு முதலில் வந்துள்ள 'ஔ' தனக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து ஒரு மாத்திரையளவே ஒலிப்பதைக் காணலாம். மேலும் ஒளகாரக் குறுக்கம் மொழிக்கு இடையிலும், இறுதியிலும் வராது.

மகரக் குறுக்கம் : ம் என்னும் எழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து 1/4 மாத்திரையாக குறைந்து ஒலிப்பது மகரக் குறுக்கம் ஆகும். ணகர , னகர மெய்களின் பின் உள்ள மகரம் 1/2 மாத்திரையிலிருந்து குறைந்து 1/4 மாத்திரையளவே ஒலிக்கும். ( உ.ம்) மருண்ம், சென்ம். தரும் வளவன், வரும் வண்டி - இத்தொடரில் நிலைமொழி ஈற்றில் உள்ள மகரம் வந்து வகர முதல் மொழியோடு புணர்கிறது. இவ்வாறு வரும்பொழுது நிலைமொழி ஈற்றில் உள்ள மகரம் 1/4 மாத்திரை அளவே ஒலிக்கும்.

ஆய்தக் குறுக்கம் : ஆய்த எழுத்து தனக்குரிய 1/2 மாத்திரை யிலிருந்த 1/4 மாத்திரையாக குறைந்து ஒலிப்பது ஆகும். ( உ.ம்) முள் + தீது = முஃடீது. மேற்கண்ட எடுத்துக்காட்டில், நிலைமொழியில் தனிக்குறிலின் கீழ் வரும் ளகரம் தகர முதன் மொழியோடு புணரும் பொழுது ஆய்தமாக மாறியுள்ளது. அவ்வாறு மாறிய ஆய்தம் தனக்குரிய அரை மாத்திரையில் இருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பதைக் காணலாம்.


Do you want to get all the notes for TNPSC Exams Free of Cost? Well, you are at right place.

Post a Comment