For Important Notifications... Click here

TNPSC பொதுத் தமிழ் - இலக்கணம் - Part 3


சுட்டெழுத்து
: ஒரு பொருளை சுட்டிக்காட்டி கூறுவது சுட்டெழுத்து. ( உ.ம் ) அவன், இவன், உவன், அவள், இவள், உவள்.  அ, இ, உ என்னும் எழுத்துக்கள் சுட்டுப் பொருளை தரும்பொழுது அவை சுட்டெழுத்துக்கள் ஆகின்றன. உ என்னும் எழுத்து பழங்காலத்தில் சுட்டெழுத்தாக பயன்பட்டு தற்போது அது பேச்சு வழக்கில் இல்லை.

அகச்சுட்டு : சொல்லில் உள்ள சுட்டெழுத்தை நீக்கினால் பிற எழுத்து பொருள் தராது. இவ்வாறு சொல்லின் அகத்தே நின்று சுட்டும் பொருளை தருவது அகச்சுட்டு எனப்படும். (உ.ம் ) அது, இவன், இவள்

புறச்சுட்டு : சொல்லில் உள்ள சுட்டெழுத்தை நீக்கினால் பிற எழுத்துக்கள் பொருள் தரும். இவ்வாறு சொல்லின் புறத்தே நின்று சுட்டு பொருளை தருவது புறச்சுட்டு எனப்படும். (உ.ம் ) இப்பசு, அக்கரடி, இம்மனிதன்

அண்மைச்சுட்டு : இ என்னும் சுட்டெழுத்து அருகில் உள்ளதை சுட்டும்பொழுது அண்மைச்சுட்டு ஆகின்றன. ( உ.ம் ) இது, இவன், இப்புத்தகம், இவ்வீடு.

சேய்மைச்சுட்டு : அ என்னும் எழுத்து தொலைவில் உள்ளதை சுட்டும்பொழுது அது சேய்மை சுட்டாகிறது. ( உ.ம் ) அது, அவன், அப்புத்தகம், அவ்வீடு

சுட்டுத்திரிபு : சொற்களில் உள்ள அ, இ என்னும் சுட்டெழுத்துக்கள் அந்த இந்த என திரிந்து வழங்குவதனை சுட்டுத்திரிபு என்பர். ( உ.ம் ) இப்பசு - இந்தப்பசு, அக்கரடி - அந்த கரடி

அருகில் உள்ளவற்றிற்கும் தொலைவில் உள்ளவற்றிற்கும் இடையில் இருப்பதைச் சுட்டிக் காட்ட ‘உ’ என்ற சுட்டெழுத்து அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. (எ.கா.) உது, உவன். 

வினா எழுத்து : வினாப் பொருளை தரும் எழுத்துக்கள் வினா எழுத்துக்கள் எனப்படும். எ, யா, ஆ, ஓ, ஏ ஆகிய ஐந்தும் வினா எழுத்துகள் ஆகும். (உ.ம் ) எந்த எழுத்து , விருந்து ஆளுக்கா ? ஆடைக்கா? அதுவா , ஏன் , அவனே , அவனோ. 

மொழியின் முதலில் வருபவை எ, யா (எங்கு, யாருக்கு)
மொழியின் இறுதியில் வருபவை ஆ, ஓ (பேசலாமா, தெரியுமோ)
மொழியின் முதலிலும், இறுதியிலும் வருபவை ஏ (ஏன், நீதானே)

“ஏளு என்னும் எழுத்து ஈற்றில் நின்று வினாவுதல் தற்காலத்தில் வழக்கில் இல்லை.

அகவினா : சொல்லின் அகத்தே நின்று வினாப் பொருளை உணர்த்துவது அகவினா எனப்படும். எது , யார், ஏன் - இச்சொற்களில் வினா எழுத்துக்களை நீக்கினால் பிற எழுத்து பொருள் தராது.

புறவினா : சொல்லின் புறத்தே நின்ற வினாப் பொருளை உணர்த்துவது புறவினா எனப்படும். ( உ.ம்) அவனா , அவனே, நீதானோ - இச்சொல்லில் உள்ள வினா எழுத்துக்களாகிய ஆ, ஏ, ஓ எழுத்துக்களை நீக்கினால் பிற எழுத்துக்கள் தனிச்சொல்லாக நின்று பொருள் தருகின்றன.


Do you want to get all the notes for TNPSC Exams Free of Cost? Well, you are at right place.

Post a Comment