For Important Notifications... Click here

TNPSC பொதுத் தமிழ் - இலக்கணம் - Part 5 - தொழிற்பெயர்

TNPSC பொதுத் தமிழ் - இலக்கணம் - தொழிற்பெயர்

தொழிற்பெயர்

தொழிற்பெயர் : தொழிலின் (செயல்) பெயரை குறிக்கும் பெயர் தொழிற்பெயர். தொழிற்பெயர் எண், இடம், காலம், பால் ஆகியவற்றைக் காட்டாது. படர்க்கை இடத்தில் மட்டும் வரும். ( உ.ம் ) படிப்பு, ஆட்டம், ஓடுதல், வருகை, விளையாட்டு, உறங்குதல்.

தொழிற்பெயர் பெரும்பாலும் அல், தல் என்னும் விகுதிகளை பெற்று வரும்.

தொழிற்பெயரை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

  1. விகுதி பெற்ற தொழிற்பெயர்
  2. விகுதி பெறா தொழிற்பெயர்

விகுதி பெற்ற தொழிற்பெயர் :  ( உ.ம் ) பொறுத்தல் = பொறு + தல், உண்ணல் = உண் + அல். அல், தல் என்னும் விகுதி பெற்று வந்துள்ளதால் இது விகுதி பெற்ற தொழிற்பெயர் எனப்படும். 

விகுதி பெறா தொழிற்பெயர் : ( உ.ம் ) தொண்டு, கூத்து, நசை (விரும்புதல்). இவையும் தொழிற்பெயர்களே, ஆனால் இவை விகுதி பெறாதவை. 

தொழிற்பெயர் விகுதிகள் பல உள்ளன.

தொழிற்பெயர் பகுதி விகுதி
பேசுதல் பேசு தல்
பாடல் பாடு அல்
ஆட்டம் ஆடு அம்
கொலை கொல்
செய்கை செய் கை
பார்வை பார் வை
துறவு துற
மறதி மற தி
உணர்ச்சி உணர் சி
தோல்வி தோல் வி
கடவுள் கட உள்
சாக்காடு சா காடு
கோட்பாடு கொள் பாடு
தோற்றரவு தோன்று அரவு
வாரானை வா ஆனை
பொறுமை பொறு மை
பாய்த்து பாய் து
வெகுளி வெகுள்
காண்பு காண் பு

தொழிற்பெயர் இரண்டு வகைப்படும்.  

  1. முதனிலைத் தொழிற்பெயர் 
  2. முதனிலை திரிந்த தொழிற்பெயர். 

முதனிலைத் தொழிற்பெயர் : தொழிற்பெயர் தனக்குரிய விகுதியைப் பெறாமல் பகுதி (முதனிலை) மட்டும் வந்து தொழிலை உணர்த்துவது முதனிலைத் தொழிற்பெயர் எனப்படும். 

( உ.ம் ) சோறு கொதி வந்தது. மின்னி இடி இடித்தது.

இடி, கொதி என்னும் சொற்கள் இடித்தல், கொதித்தல் என்னும் சொற்களின் பகுதிகளாகும். இவை கொதித்தல், இடித்தல் என்று வராமல் கொதி, இடி என்று பகுதி மட்டும் வந்துள்ளன. எனவே இவை முதனிலைத் தொழிற்பெயர்கள் என்று அழைக்கப்படுகின்றன. 

முதனிலை திரிந்த தொழிற்பெயர் : தொழிற்பெயரின் விகுதியைப் பெறாத முதனிலை, திரிந்து (மாறுபட்டு) வருவது முதனிலை திரிந்த தொழிற்பெயர் எனப்படும்.

( உ.ம் ) கெடுவான் கேடு நினைப்பான். காந்தியடிகள் துப்பாக்கிக் சூடுபட்டு இறந்தார்.

இந்த எடுத்துக்காட்டுகளில் கெடு என்னும் முதனிலை கேடுஎன்றும் சுடு என்னும் முதனிலை சூடு என்றும் மாறி வந்துள்ளன. எனவே இவை முதனிலை திரிந்த தொழிற்பெயர்கள் என்று அழைக்கப்படுகின்றன.

Do you want to get all the notes for TNPSC Exams Free of Cost? Well, you are at right place.

Post a Comment